Monday, June 16, 2008

'நேசம்

மெல்லிய ப்ரியங்களையும்
நெஞ்சார்ந்த நேருக்கங்களையும்
எந்தவொரு காரணமும் இன்றி
புறக்கணிக்கப் பழகிவிட்டோம்
செடியிலிருந்து ஓர் இலை
விழுவதைப் போல
எல்லாமே நமக்கு இயல்பாகிவிட்டது
நிராகரிப்பின் வேர்கள்
நம்மைத் தீண்டும் வரையிலும்
புரிந்துகொள்ளவே இயலாது
அன்பின் நீள அகலங்களை
தினம் தினம்
இழந்து கொண்டிருக்கும்
நேசங்களைப் பற்றிய
அக்கறை இல்லாமல்
வெற்றிகரமாய்
பதித்துக் கொண்டிருக்கிறோம்
வெற்றுத் தடங்களை..

1 comment:

Ayyanar Viswanath said...

வணக்கம்
ட்விட்டர்ல பிடிச்சி வந்தேன்..இந்த கவித நல்லாருக்கு அதே சமயம் முன் பதிவு புரியவே இல்ல..கண்ண கட்டுது :)
என் பதிவு புரியலன்னு சொல்றவங்களோட மனநிலை எப்படியிருக்கும்னு இப்பதான் புரிஞ்சிக்க முடியுது :D